பாலியல் பலாத்கார முயற்சி: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
By கோவை | Published on : 14th June 2014 04:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை, பீளமேடு மயிலம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (35). இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அவரது வீட்டருகே வசித்த 36 வயது பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து சக்திவேலை பிடித்து பீளமேடு போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ் வழக்கு, கோவை மூன்றாவது சார்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட சக்திவேலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.