சுடச்சுட

    

    பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு

    By பொள்ளாச்சி,  |   Published on : 14th June 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சிறுமிகள் கூறிய அடையாளங்களை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகிக்கப்படும் நபர்களை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியும், அவர்களது புகைப்படங்களை சிறுமிகளிடம் காண்பித்து அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. சிறுமிகள் என்று தெரிந்தும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போஸ்கோ ஆக்ட் பிரிவின் கீழும், எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழும் தற்போது, மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    சட்டப்பேரவை துணைத் தலைவர் ஆறுதல்: பாதிக்கப்பட்ட சிறுமிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, மக்களவை உறுப்பினர் மகேந்திரன், சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார் ஜகடே, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai