சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 14th June 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    காரமடை சாலையிலுள்ள அபிராமி திரையரங்கு முன்பிருந்து துவங்கிய இப்பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் மோகன், நகராட்சிப் பொறியாளர் (பொறுப்பு) கணேசன், நகர்மன்ற துணைத் தலைவர் ரமாசெல்வி, வார்டு உறுப்பினர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் கொடியசைத்து பேரணியைத் துவக்கிவைத்தார்.

    இப்பேரணியில் விஎன்கே மகளிர் கல்லூரி, நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மகாஜன மேல்நிலைப்பள்ளி, சேன்-ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜிஎம்ஆர்சி பகவான் மகாவீர் பள்ளி, சிஎஸ்ஐ மணி நகர் நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேரணியில் அவர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வுப் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

    இப்பேரணி காரமடை சாலை, பங்களாமேடு, பேருந்து நிலையம், உதகை சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில், நகராட்சி அலுவலக மேலாளர் சித்தார்த்தன், அலுவலர்கள் ஜெயராம், செந்தில்குமார், கவுன்சிலர்கள் உமா, ஜெகநாதன், கார்த்தி, மகேந்திரன், பாலன், நாகஜோதி, மோகன்குமார், சூரிய பிரகாஷ் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் கூறியது: தமிழக அரசின் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், திரை அரங்குகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் வரும் 25-ஆம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்கவேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தபட்டவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai