Enable Javscript for better performance
ரியல் எஸ்டேட் பெண் அதிபர் மற்றொரு வழக்கில் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவை அருகே போலி ஆவணங்கள் மூலமாக பிறருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் பெண் அதிபர் மற்றொரு வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகள் அமுதா மீனாட்சி (33). அதே பகுதியில் "மீனாட்சி ஷெல்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். பிறருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, மாவட்ட குற்றப்பிரிவினரால் அமுதா மீனாட்சி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மகாதேவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை வெள்ளக்கிணறு பிரிவைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சாந்தினி அளித்த புகாரின் பேரில், அமுதா மீனாட்சியின் சகோதரர் கார்த்திக் முருகானந்தம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அமுதா மீனாட்சியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமை அவரை ஆஜர்படுத்த கோவை ஜே.எம்.1 நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai