சுடச்சுட

  

  வேளாண் பல்கலை. செமஸ்டர் தேர்வில் புதிய கையடக்க உபகரணம் அறிமுகம்

  By கோவை  |   Published on : 14th June 2014 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முறையில் புதிய உபகரணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், லிட்டில் மோர் இன்னவேஷன் லேப் இணைந்து விடைத்தாள் இல்லாத தேர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இத்தேர்வு முறையை நான்கு உறுப்புக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.

  இத்தேர்வு முறையின் மூலம் 7,000 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 1 லட்சத்து 50,000 விடைத்தாள் இணையதளம் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறை படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் உதவிகரமாக உள்ளது.

  தேர்வு எழுதுவதற்கான உபகரணம் கையடக்க கருவியாகும். இதன் மூலம் தேர்வு நாள், பாட முறை, தேர்வு முறை முதலியவற்றை எளிதில் தெரிந்து கொள்ள முடிகிறது.

  இக்கருவியை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை சிக்கனப்படுத்தப்படுகிறது. சாதாரண காகித தாளில் தேர்வு எழுதும்போது ஒரு மாணவருக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை செலவாகிறது. இது ஒரு பாதுகாக்கப்பட்ட தேர்வு முறையாகும்.

  இதுதொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி கூறியது: செமஸ்டர் தேர்வில் தாளில்லாத தேர்வு முறை புதுமையான முறையாகும். இதன்மூலம் மாணவர்களின் எழுதும் வேகம் அதிகரிக்கப்படுவதுடன் தாளுக்கான செலவும், நேரமும் சேமிக்கப்படுகிறது.

  இக்கருவி மூலம் எழுதும் திறன் மேம்படுவதோடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மாறியுள்ளார்கள். இது ஓர் எளிமையான, இலகுவான முறையாகும் என்றார்.

  இதற்கான ஒப்பந்த உடன்படிக்கை நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ரா.ரபீந்திரன், தேர்வாணையர் கெ.இளமுருகு உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். லிட்டில் மோர் இன்னவேஷன் லேப் உரிமையாளர் ஸ்ரீகாந்த் கணேசன், கருவி குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai