சுடச்சுட

  

  தீவிரவாதி ஹைதர் அலியை இரண்டு நாள் போலீஸ் காவல் முடிந்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.

  கோவை வின்சென்ட் சாலையைச் சேர்ந்தவர் அல்-உம்மா தீவிரவாதி ஹைதர் அலி (45). இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது உள்பட இரு வழக்குகளில் கடந்த 21 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் அண்மையில் பிடிபட்டார். அவரை மேற்கூறப்பட்ட இரு வழக்குகளிலும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

  இந்நிலையில் அவரை இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. வெள்ளிக்கிழமை காவல் விசாரணை முடிந்து சிபிசிஐடி போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

  இது குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்ட போது, வழக்குகளில் தலைமறைவான பிறகு பாலக்காடு முகவரியை வைத்து பாஸ்போர்ட், விசா எடுத்த ஹைதர் அலி அவற்றை வைத்து ரியாத் சென்றார். பிறகு மீண்டும் 2001ஆம் ஆண்டு பாலக்காடு வந்து திருமணம் செய்து, பிறகு மீண்டும் ரியாத் சென்றுவிட்டார்.

  அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலக்காடு வந்துள்ளார். அங்கு ஒரு துணிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் மேற்கூறப்பட்ட இரு வழக்குகளைத் தவிர வேறு குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், அபுபக்கர் சித்திக்குடன் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai