Enable Javscript for better performance
அரசு மாணவர் விடுதிகளை மேம்படுத்த வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    அரசு மாணவர் விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    பொள்ளாச்சியில் மாணவிகள் இருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 25க்கும் மேற்பட்டோர், மாவட்ட செயலாளர் தீபக் சந்திரகாந்த் தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை பேரணியாக வந்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியனிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    கோவை மாவட்ட பகுதிகளில் உரிய அங்கீகாரமில்லாமல் செயல்படும் விடுதிகளை மூடி, அதை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் செயல்படும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான தங்கும் விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அங்கு தங்கி இருக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    பொள்ளாச்சியில் போதைப் பொருள் புழக்கம் பரவலாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பிரௌசிங் மையங்களில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்து தருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டிருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai