Enable Javscript for better performance
ஒன்றிய அலுவலகத்தில் ஆபாச பேச்சு: ஊழியர்கள் 2 பேர் இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஒன்றிய அலுவலகத்தில் ஆபாச பேச்சு: ஊழியர்கள் 2 பேர் இடைநீக்கம்

    By பொள்ளாச்சி,  |   Published on : 15th June 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உடன் பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் ஆபாச வார்த்தை பேசியதாக அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலக உதவியாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் ஹரிகிருஷ்ணன், முருகேசன். இவர்கள் இருவரும் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகள் சம்பந்தமாக வரும் பொதுமக்களிடமும், உடன் பணிபுரியும் பெண் பணியாளர்களிடமும் ஆபாசப் பேச்சு பேசுவதாக புகார் இருந்து வந்தது.

    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் அலுவலகத்தில் ஆபாச வார்த்தைகளில் பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை உயர் அதிகாரிகள் கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

    எனவே, இது குறித்து வடக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆணையாளர்) கலியவரதனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலியவரதன் வெள்ளிக்கிழமை அலுவலக உதவியாளர்கள் ஹரிகிருஷ்ணன், முருகேசன் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்தார்.

    இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கலியவரதன் கூறுகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அலுவலக உதவியாளர்கள் இருவரும் ஏற்கெனவே அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை மதிக்காமலும், இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது குறித்து கண்டித்தாலும் அவர்கள் அதை அலட்சியம் செய்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடன் பணிபுரிந்த பெண் பணியாளர்களிடம் ஆபாச வார்த்தை பேசியுள்ளனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai