சுடச்சுட

    

    கருப்பு பட்டை அணிந்து பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

    By கோவை,  |   Published on : 15th June 2014 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணிக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

    கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.17 ஆயிரமும், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும் பணி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உதவித் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சனிக்கிழமை கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai