சுடச்சுட

    

    காரமடை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தல்

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 15th June 2014 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரமடை பேரூராட்சியில் வீடுகள் உள்பட அனைத்து கட்டடங்களிலும் இம்மாத இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்க வேண்டுமென பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து காரமடை பேரூராட்சி தலைவர் டி.டி. ஆறுமுகசாமி, செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் கூறியது:

    தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், காரமடை பேரூராட்சி பகுதியிலுள்ள வீடுகள், மருத்துவமனைகள், திரை அரங்குகள், திருமண மண்டபங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், வணிக வளாகங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்பட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதியை இம்மாத இறுதிக்குள் அமைத்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai