சுடச்சுட

    

    கோவையில் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 7.6 மில்லியன் லிட்டர் குடிநீரும், சிறுவாணி திட்டத்தில் 7 மில்லியன் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் க.லதா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குள்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 2.21 லட்சம். அப்பகுதிகளுக்கு விநியோகிக்க ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 7.6 மில்லியன் லிட்டர் குடிநீரும், சிறுவாணி திட்டத்தின் கீழ் 7 மில்லியன் லிட்டர் குடிநீரும் பெறப்படுகிறது.

    அபரிமிதமான மக்கள் தொகையின் காரணமாக குடிநீர் விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டாலும், ஆழியாறு குடிநீர் குழாய்களில் ஏற்பட்டிருந்த உடைப்பு மற்றும் கசிவுகள் சரிசெய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் குடிநீர் மேற்கண்ட பகுதிகளுக்கு எட்டு முதல் 12 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் 279 ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலமாக பொதுமக்களின் பிற பயன்பாட்டிற்கு தினமும் 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

    வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக மேற்கண்ட பகுதிகளில் புதிதாக 13 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளன.

    மேலும் குடிநீர் தேவை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பிற பகுதிகளிலும் 10 ஆழ்குழாய் கிணறுகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கவும், அதன் மூலம் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai