Enable Javscript for better performance
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி- Dinamani

சுடச்சுட

    

    கோவை தொழிலாளர் துறை அலுவலகத்தில், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

    இணை ஆணையர் ப.மாரிமுத்து தலைமையில் தொழிலாளர் துணை ஆணையர் சி.தங்கவேல், ஆய்வாளர் இரா.மலர்க்கொடி, உதவி ஆய்வாளர்கள், அலுவலர்கள், முத்திரை ஆய்வர்கள், பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர்.

    கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

    குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துபவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து ரூ.20 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் ஆய்வாளர் இரா.மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai