Enable Javscript for better performance
கேரளத்துக்கு தங்கம் கடத்த முயன்ற வழக்கு: மேலும் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு தங்கம் கடத்த முயன்ற வழக்கு: மேலும் ஒருவர் கைது

    By கோவை,  |   Published on : 15th June 2014 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஷார்ஜாவிலிருந்து கேரளத்துக்கு ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்த முயன்ற வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை கோவை சுங்க இலாகாவினர் கைது செய்தனர்.

    கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுபட்டிருந்தனர். அப்போது ஷார்ஜாவிலிருந்து வந்த பயணியை சோதனையிட்டனர். கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் (28) என்ற அந்த நபர், எமெர்ஜென்ஸி லைட்டில் வைத்து ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்த முயன்றதாக கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அனீஷ் (32) என்பவரிடம் தங்கத்தைக் கொடுக்க வந்ததாக அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அப்துல் சலாம் மூலமாக அனீஷை வெள்ளிக்கிழமை இரவு விமான நிலையம் அருகே வரவைத்த சுங்க இலாகவினர், அனீஷையும் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai