Enable Javscript for better performance
செப். 30-ஆம் தேதி வரை தாற்காலிக நிறுத்தம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செப். 30-ஆம் தேதி வரை தாற்காலிக நிறுத்தம் நீட்டிப்பு

    By கோவை,  |   Published on : 15th June 2014 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமுறையில் உள்ள தாற்காலிக நிறுத்தத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி:

    கோவை வழியாக இயக்கப்பட்டு வந்த சில விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் தாற்காலிமாகவும், சோதனை அடிப்படையிலும் சில ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சில ரயில்களின் தாற்காலிக நிறுத்தத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.

    தற்போது செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தாற்காலிக நிறத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி லோகமான்ய திலக்-கோவை விரைவு ரயில் ஓமலூரிலும், மாயவரம்-கோவை ஜனசதாப்தி ரயில் இருகூரிலும், கண்ணனூர்-யஷ்வந்த்பூர் ரயில் திருப்பூரிலும், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் ரயில் போத்தனூரிலும் நிறுத்தப்படவுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai