சுடச்சுட

  

  நில அளவை பதிவேடுகளை பதிவு செய்ய தகுதிவாய்ந்த தனியார் கணினி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

  இது குறித்து ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்தி: தேசிய நில ஆவணங்கள் கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நில அளவை பதிவேடுகள் துறையின் ஆவணங்கள் ஜூலை 1-ஆம் தேதிமுதல் தகுதி வாய்ந்த கணினி பதிவேற்றுநர்கள் மூலம் பதிவு செய்யும் பணி தொடங்கவுள்ளது.

  ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் கணினி பதிவேற்றுநர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஆங்கிலம் மேல்நிலை தட்டச்சு தேர்ச்சி, தமிழ் கீழ்நிலை தட்டச்சு தேச்சி, கணினி இயக்குவதில் திறமையும் பெற்றிருக்க வேண்டும்.

  கோவை மாவட்டத்தில் தகுதியுடைய 20 கணினி பதிவேற்றுநர்களை கொண்டு பணியை மேற்கொள்ள விருப்பமுடைய தனியார் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.

  எனவே தகுதியுடைய தனியார் நிறுவனங்கள் விண்ணப்ப படிவத்தை பெறவும், கூடுதல் விவரங்களை பெறவும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) மற்றும் கோவை நில அளவை பதிவேடுகள் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0422-2300293 என்ற எண்ணிலோ ஜூன் 19-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai