சுடச்சுட

    

    நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை பற்றியதே ஆன்மிகம்:ஜக்கி வாசுதேவ்

    By கோவை,  |   Published on : 15th June 2014 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆன்மிகம் என்பது கவுளை பற்றியது இல்லை; நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியதே என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

    ஈஷா யோகா மையத்திற்கு சனிக்கிழமை வந்த தர்மஸ்தலா கோவிலின் பட்டாதிகாரி பூஜ்ய வீரேந்திர ஹெக்டேவுக்கு, பாரம்பரிய முறைப்படி தெய்வீக உச்சாடனைகளுடன் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் "நமது தேசத்தை உருவாக்குவோம்', "ஞானியின் பார்வையில்' ஆகிய தலைப்புகளின் கீழ் சத்குருவுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆதியோகி ஆலயத்தில் நடைபெற்றது.

    அப்போது ஆன்மிகத்தின் முக்கியத்துவம் குறித்தும், ஆன்மிகத்திற்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்தும், மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள யோக விஞ்ஞானம் குறித்தும் சத்குரு விளக்கினார்.

    ஆன்மிகம் என்பது கடவுளைப் பற்றியதல்ல; நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை குறித்தானது என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai