சுடச்சுட

    

    கோவையில் இளம்பெண் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: கோவை கரும்புக்கடை பகுதி ராயல் நகரைச் சேர்ந்தவர் முகமது பைசல். இவரது மனைவி நஜிமுநிஷா (25). இரு குழந்தைகள் உள்ளனர். நஜிமுநிஷா வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரில் பேரில் குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், கரும்புக்கடை மதினா நகரைச் சேர்ந்த கலீல் ரகுமான் (29) என்பவர் நஜிமுநிஷாவுக்கு போன் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததே அவரது தற்கொலைக்கு காரணம் என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கலீல் ரகுமான் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai