சுடச்சுட

  

  கோவையில் நடந்து வரும் தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில், தமிழக அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

  கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டிகள் நடந்து வருகின்றன. காலிறுதிப் போட்டிகள் சனிக்கிழமை நடந்தன.

  ஹரியாணாவுக்கும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிக்கும் இடையில் நடந்த காலிறுதிப் போட்டியில் 23-14 என்ற கோல் கணக்கில் ஹரியாணா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஹரியாணாவின் ஜோதி 7 கோல்கள் அடித்தார்.

  பஞ்சாப் 18-13 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரத்தை வென்றது. பஞ்சாபின் அனுபிர் கெளர் 5 கோல்கள் அடித்தார். தமிழக அணி 21-19 என்ற கோல் கணக்கில் தில்லியை வென்றது. தமிழக அணியின் சபிதா 9 கோல்கள் அடித்து தமிழக அணியை அரையிறுதிக்குத் தகுதி பெற வைத்தார்.

  இமாசல பிரதேசம் 26-20 என்ற கோல் கணக்கில் சண்டீகரை வென்றது. இமாசல பிரதேச அணியின் பபிதா அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்தார்.

  அரையிறுதிப் போட்டியில் ஹரியாணா, பஞ்சாப் அணிகளும், தமிழகம், இமாசல பிரதேச அணிகளும் மோத உள்ளன. இப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai