சுடச்சுட

  

  கோவை மாவட்டத்தில் அனுமதி பெறாமலும், முறையான பாதுகாப்பு வசதி இல்லாமலும் இயங்கும் தனியார் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

  இது குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி:

  பொள்ளாச்சி அருகே டி.இ.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் அரசின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த காப்பகத்தில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

  கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் விடுதிகள், அனுமதி பெற்றும் போதிய பாதுகாப்பு வசதி இல்லாத விடுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இயங்கும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவியரை வேறு காப்பகத்திற்கு மாற்றி உரிய பாதுகாப்பும், தரமான கல்வியும் வழங்க மாவட்ட சமூகநலத் துறையும், கல்வித் துறையும், காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai