Enable Javscript for better performance
அகஸ்டா ஹைடெக் நிறுவனத்துடன் சி.ஐ.இ.டி. கல்லூரி ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    அகஸ்டா ஹைடெக் நிறுவனத்துடன் சி.ஐ.இ.டி. கல்லூரி ஒப்பந்தம்

    By கோவை  |   Published on : 16th June 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகஸ்டா ஹைடெக் நிறுவனத்துடன், கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (சி.ஐ.இ.டி.) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் மூலம் மேகக் கணினி, கைக்கணினி (கிளவுட் அண்ட் மொபிலிடி) போன்ற புதிய தொழில்நுட்பத்தில் தங்களது அறிவையும், ஆளுமையையும் மாணவர்கள் பெருக்கிக்கொள்ள முடியும்.மேலும், இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான சிறு, குறுந்தொழில்நுட்ப முகவர்களாக அவர்களை வருங்காலத்தில் உருவாக்கவும் இது உதவும்.

    கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இயக்குநர் கே.ஏ.சின்னராஜு, அகஸ்டா ஹைடெக் நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.ரகுபதி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    கல்லூரி முதல்வர் என்.நாகராஜன், அகஸ்டா ஹைடெக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கார்த்திக் பிச்சை, கணினி துறை தலைவர் எஸ்.குணசேகரன், மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர் எஸ்.விஜயகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai