சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்குமாறு இந்து முன்னணி கோரிக்கை

    By கோவை,  |   Published on : 16th June 2014 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    சத்ரபதி சிவாஜி முடிசூட்டிய தினம் ஹிந்து சாம்ராஜ்ய தின விழாவாக இந்து முன்னணி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஹிந்து சாம்ராஜ்ய தின விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாநகரில் 208 இடங்களில் கொடியேற்றுதல் மற்றும் பெயர்ப்பலகை திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, செல்வபுரம், சிவாலயா தியேட்டர் முன்பு ஹிந்து சாம்ராஜ்ய தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜே.கிஷோர்குமார் பேசியது:

    கோவில்களில் நடைமுறையில் உள்ள கட்டண தரிசன முறையைத் தடை செய்ய வேண்டும். மதமாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி, மாவட்ட செயலாளர்கள்

    சதீஷ், சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai