சுடச்சுட

    

    மராட்டிய மன்னர் வீரசிவாஜி சத்ரபதியாக முடிசூட்டிய தினத்தைக் கொண்டாடும் விதமாக கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், ஜி.என்.மில்ஸ், கே.என்.ஜி.புதூர், கணுவாய், வடமதுரை, என்ஜிஜிஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு, பிரஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் பாலன், பொருளாளர் தியாகராஜன், நகரச் செயலாளர் தம்பி சரவணன், ஒன்றியச் செயலாளர் ஜெய்கார்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ராமகிருஷ்ணன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    மதுக்கரையில்...

    மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூடிய நாளைக் கொண்டாடும் வகையில் மதுக்கரை வட்டத்துக்கு உள்பட்ட இந்து முன்னணி சார்பில் 15 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு, கோவை மாவட்ட துணைத் தலைவர் கே.எம்.பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சி.எம்.அண்ணாதுரை மலுமிச்சம்பட்டியில் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில் அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai