சுடச்சுட

    

    கோவையில் ஏடிஎம் மையம் ஒன்றில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயன்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது:

    கோவை, அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. பிரதானச் சாலையில் இருப்பதால் அந்த ஏடிஎம் மையத்துக்கு காவலாளிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை பராமரிக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, அந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க யாரோ முயற்சி செய்திருப்பது தெரிந்தது.

    அதைத் தொடர்ந்து அவர்கள் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, கடந்த மாதம் 31-ஆம் தேதி ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தெரிந்தது.

    பிறகு இதுகுறித்து பீளமேடு போலீஸில் புகார் அளித்த அந்த நிறுவனத்தினர், கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளையும் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காமிரா பதிவில் தெரியும் அந்த நபரைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai