Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்கள் சாவுகல்லூரி மாணவர்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவர்கள் சாவுகல்லூரி மாணவர்கள் சாவு

    By பெ.நா.பாளையம்  |   Published on : 16th June 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் இருமாணவர்கள் இருவேறு சம்பவங்களில் உயிரிழந்தனர்.

    கஸ்தூரிபாளையம், தெற்கு வீதியைச் சேர்ந்தவர் தின்னப்பா. இவருடைய மகன் ஜான்பிரிட்டோ(17). சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவர், வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு கல்லூரி அருகிலிலுள்ள குட்டைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீந்த முடியாமல் அதில் மூழ்கி இறந்தார்.

    இதே கல்லூரியில் இரண்டாமாண்டு மெக்கானிக்கல் பயின்று வந்தவர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கார்த்திக்(17). இவர், குட்டையில் மூழ்கி இறந்த ஜான் பிரிட்டோவின் நெருங்கிய நண்பராவார். நண்பர் ஜான்பிரிட்டோ இறந்த வருத்தத்தில் இவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர், சனிக்கிழமை வீட்டில் யாருமில்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெ.நா.பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai