Enable Javscript for better performance
காவல்துறை சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடை- Dinamani

சுடச்சுட

    

    காவல்துறை சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடை

    By கோவை,  |   Published on : 16th June 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் 45 பேருக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன.

    இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

    கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களால் "காவலர்

    காக்கும் கரங்கள்' என்ற அமைப்பு 2009ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அமைப்பில் ஆய்வாளர் அய்யாசாமி தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் 25 பேர் சேர்ந்து தங்களது மாத ஊதியத்திலிருந்து

    ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, ஆதரவற்ற முதியோர், குழந்தைகள், ஏழை மக்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வகைகள், உடைகள் மற்றும் மாதம் இரு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு 200 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை, சுண்டக்காமுத்தூரிலுள்ள ஸ்ரீ சுவாமி விவேகானந்தா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 45 குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன. மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பள்ளிச் சீருடைகளை வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai