சுடச்சுட

    

    கிரிக்கெட் போட்டி: டிரிப்ளக்ஸ் அணி வெற்றி

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 16th June 2014 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் கிளாடியேட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் மேட்டுப்பாளையம் டிரிப்ளக்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது.

    மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை, நால்ரோடு அருகே நடைபெற்ற இப்போட்டியை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் சிவகுமார் துவக்கி வைத்தார். இதில் காரமடை, மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் உள்பட கோவை மாவட்ட பகுதிகளிலிருந்து 18 அணிகள் பங்கேற்றன.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் மேட்டுப்பாளையம் டிரிப்ளக்ஸ் கிரிக்கெட் அணி முதலிடத்திலும், ஜெய்ஹிந்த் கிரிக்கெட் அணி 2-ஆம் இடத்திலும் வெற்றி பெற்றன.

    இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கிளாடியேட்டர்ஸ் கிளப் தலைவர் இஸ்ரேல் சாம்ராஜ் தலைமை வகித்தார். வழக்குரைஞர் கணேஷ்பாண்டியன், நீச்சல் பயிற் சியாளர் முத்துராமலிங்கபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேட்டுப்பாளையம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் சீனிவாசன், முதலிடம் பெற்ற டிரிப்ளக்ஸ் அணிக்கு சுழல் கோப்பையையும், வெற்றிபெற்ற பிற அணிகளுக்கு கேடயங்களையும் வழங்கினார்.

     அரிமா சங்கச் செயலர் ஞானமூர்த்தி, பொருளாளர் பரமசிவம், வழக்குரைஞர் கேசவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai