சுடச்சுட

  

  குழந்தைகளை பாதிக்கும் நிமோனியா:தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தல்

  By கோவை  |   Published on : 16th June 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குழந்தைகளை பாதிக்கும் நிமோனியா காய்ச்சலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்களான டாக்டர்கள் துரைகண்ணன், மகாலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

  குழந்தைகளைத் தாக்கும் பலவித நுண்கிருமிகளில் "நிமோகாக்கஸ்' என்ற நுண்கிருமி நுரையீரல் மற்றும் மூளையை பாதிக்கக் கூடியது. இதனால் ரத்தத்தில் நச்சு ஏற்படும் பட்சத்தில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதேபோல காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய்களை உண்டாக்கும்.

  நிமோனியா தொடர்பான குழந்தைகள் இறப்பில் 50 சதவீதம் நிமோகாக்கஸ் நுண்கிருமிகளால் உண்டாகிறது. 2 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை நிமோகாக்கஸ் நுண்கிருமி கடுமையாக பாதிக்கும். ஒவ்வோர் ஆண்டும் 4 லட்சம் குழந்தைகள் நிமோகாக்கஸ் நுண்கிருமி பாதிப்பால் உயிரிழக்கின்றனர்.

  சத்துணவுக் குறைபாடு, பிறப்பில் எடைக்குறைவு, தவிர்க்கப்பட்ட தாய்ப்பால், விடுபட்ட தட்டம்மை தடுப்பூசி, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் நிமோகாக்கஸ் நுண்கிருமி குழந்தைகளைத் தாக்குகிறது. இதனை தடுப்பூசி மூலம் மட்டுமே தடுக்க முடியும்.

  இதற்காக தயாரிக்கப்பட்ட "நிமோகாக்கஸ் காஞ்சுகேட் வேக்ஸின்' என்ற தடுப்பூசி மூலம் நோய் பாதிப்பைத் தடுக்க முடியும். மேலைநாடுகள், பாகிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அரசே இதற்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

  ஆனால் இதுபோன்ற தடுப்பூசி திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தவில்லை.

  எனவே நோய் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த வேண்டியது அவசியம் என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai