சுடச்சுட

    

    சார்பு நீதிமன்றம் அமைக்க கோரி அமைச்சரிடம் மனு

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 16th June 2014 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் தாலுகா நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையத்தில் உள்ள நீதிமன்றத்தை சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு தனித்தனியாகப் பிரித்து அமைக்க வேண்டும். அன்னூர் தாலுகா சிவில் வழக்குகளை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் தாலுகா நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் வழக்குரைஞர் சங்கம் சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு அளிக்கப்பட்டது.

    இதில், வழக்குரைஞர் சங்கச் செயலாளர் சிவகுமார், தலைவர் கனகசுந்தரம், உதவித் தலைவர் உமர் பாரூக், செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai