Enable Javscript for better performance
சாலை விபத்தில் ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

    உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல் மகன் கருப்புசாமி(27). இவர், சூலூர் அருகே பட்டணத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் உடுமலைப்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சூலூர் அருகே கோவையிலிருந்து தாராபுரம் சென்ற அரசுப்பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்புசாமி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார், பேருந்து ஓட்டுநர் சின்னதுரையை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai