சுடச்சுட

    

    சிறுமிகள் பலாத்கார விவகாரம்: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

    By பொள்ளாச்சி,  |   Published on : 16th June 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் டிஇஎல்சி தேவாலய நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பொள்ளாச்சி டிஇஎல்சி தேவாலய மாணவர் விடுதியில் இருந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி வீராச்சாமி, வார்டன் சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாதிரியார் பாக்கியநாதன் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், டிஇஎல்சி செயலாளர், மேலாளர் உள்பட அனைத்து நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்மென்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

    இக் கோரிக்கையை வலியுறுத்தி அனுமதியின்றி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக கோவை புறநகர் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், மாநில மகளிரணிச் செயலாளர் மகேஸ்வரி, நகரத் தலைவர் பாலு உள்பட 79 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை அனைத்துக் கட்சி சார்பில் பொள்ளாச்சி டிஎஸ்பியிடம், பொதுமக்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai