சுடச்சுட

  

  கோவை, செல்வபுரத்தில் 1,014 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

  கோவை, பேரூர் வட்டம், செல்வபுரம், முத்துசாமி காலனியைச் சேர்ந்த 1,014 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்களை வழங்கினார்.

  அப்போது அவர் பேசியது:

  தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவைத் தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். அதன் அடிப்படையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே நிறைவேற்றி வருகிறார்.

  தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உள்பட்ட 7 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள், 14 வார்டுகளில் விலையில்லாப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டுவிட்டன.

  மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், 14 வார்டுகளில் வழங்குவது காலதாமதம் ஆனது. தற்போது மீண்டும் மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, தெற்கு மண்டலக் குழுத் தலைவர் பெருமாள்சாமி, கவுன்சிலர் சின்னதுரை, பேரூர் வட்டாட்சியர் காந்திமதி உள்பட அரசு அலுவலர்களும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai