சுடச்சுட

    

    பாலவிநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

    By பெ.நா.பாளையம்  |   Published on : 16th June 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி கிராமம் அருள்ஜோதி நகரில் புதிதாக கட்டப்பட்ட பாலவிநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    விழாவையொட்டி, திருவிளக்கு வழிபாடு, விமான கலசம் நிறுவுதல், மூல மூர்த்தியை ஆதாரப் பீடத்தில் வைத்து எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. வியாழக்கிழமை 108 வகையான மூலிகை பொருள்களுடன், அருள் நிறையேற்றல், ஞானதிருஉலா ஆகியன நடைபெற்றன.

    கெளமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்து விமானக் கலசம், மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டை நடத்தி வைத்தார். தொடர்ந்து அலங்கார பூஜையும், அன்னதானமும் நடைபெற்றன.

    விழாவில், எமரால்டு இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கே.சீனிவாசன், முன்னாள் ஊராட்சித் தலைவர் பி.வி.மணி, குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai