சுடச்சுட

    

    கோவை-பாலக்காடு சாலை, செட்டிபாளையம் பிரிவு அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது கேரள அரசுப்பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

    இது குறித்து மதுக்கரை போலீஸார் கூறியது:

    கேரள மாநிலம் சித்தூர் தாலுகாவைச் சேர்ந்த கந்தசாமி மகன் தண்டபாணி(60). இவர், கோவை வந்து விட்டு வெள்ளிக்கிழமை இரவு சித்தூரை நோக்கி தனது சகோதரர் பரமசிவத்தின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

    இருசக்கர வாகனம் செட்டிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்து கொண்டிருந்த கோவையிலிருந்து திருச்சூரை நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த தண்டபாணி உயிரிழந்தார்.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த மதுக்கரை போலீஸார் பேருந்தை பறிமுதல் செய்து தப்பி ஒடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai