Enable Javscript for better performance
மதுக்கரை, திருமலையம்பாளையம் கிராமங்களில் என்.பி.ஆர். புகைப்படம் எடுக்கும் பணி இன்று துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கரை, திருமலையம்பாளையம் கிராமங்களில் என்.பி.ஆர். புகைப்படம் எடுக்கும் பணி இன்று துவக்கம்

    By மதுக்கரை,  |   Published on : 16th June 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுக்கரை, திருமலையம்பாளையம் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு தேசிய மக்கள் தொகைப்பதிவேடு (என்.பி.ஆர்) இரண்டாம் கட்ட புகைப்படம் எடுக்கும் பணி திங்கள்கிழமை (ஜூன் 16) துவங்குகிறது.

    புகைப்படம் எடுக்க வரும்போது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக்கணக்கு புத்தகம், பான் கார்டு, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்ட அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஓன்றை எடுத்துவந்து பதிவுசெய்து கொள்ளலாம். இந்த ஆவணங்கள் இல்லாதவர்களும் இம்முகாமில் பதிவுசெய்து கொள்ளலாம்.

    கிராமத்தின் பெயர், புகைப்படம் எடுக்கும் இடம், புகைப்படம் எடுக்கும் நாள் விவரம்:

    மதுக்கரை உள்வட்டம் : ஜூன் 16, 17, 18-ஆம் தேதி, மதுக்கரை பேருராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு, மதுக்கரை பேருராட்சி அலுவலகம். மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு மாவுத்தம்பதி ஊராட்சி அலுவலகம். பிச்சனூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு பிச்சனூர் ஊராட்சி அலுவலகம்.

    திருமலையம்பாளையம் உள்வட்டம் : ஜூன் 16,17,18 -ஆம் தேதி, எட்டிமடை பேருராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு எட்டிமடை பேருராட்சி அலுவலகம். ஜூன் 19,20-ஆம் தேதி, சீரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு சீரபாளையம் ஊராட்சி அலுவலகம். திருமலையம்பாளையம் (தெற்கு, வடக்கு) பேருராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு, திருமலையம் பாளையம் பேருராட்சி அலுவலகம். வழுக்குப்பாறை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு வழுக்குப்பாறை ஊராட்சி அலுவலகம்.

    இத்தகவலை, மதுக்கரை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai