Enable Javscript for better performance
மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுநர் பலி- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

    மத்தியப்பிரதேசம் ராஜ்காட்டை சேர்ந்த கே.ஜி.சர்மா என்பவரின் மகன் மணீஷ்குமார்(26). இவர், பெங்களூருவிலிருந்து கோவையை நோக்கி சரக்கு லாரியை ஓட்டி வந்தார். லாரி, முத்துக்கவுண்டன்புதூர் அருகே வந்தபோது தூக்கம் வந்ததால் வண்டியை சாலையோரம் நிறுத்திய சர்மா, தூங்குவதற்காக லாரியின் மீது ஏறியுள்ளார். அப்போது அருகே இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai