சுடச்சுட

  

  மாணவர்கள் ஒரே துறையில் வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்காமல் ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளில் வேலைவாய்ப்பு பெற முயல வேண்டும் என்று, கப்பற்படை பிரிவு கமாண்டர் செந்தில்நாதன் பேசினார்.

  கோவை, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு பொறுப்புகளை ஏற்ற மாணவர் தலைவர் டேனியல் ஹென்றிபால், மாணவியர் தலைவர் டி.நிவேதிதா உள்ளிட்ட 30 மாணவ மாணவியருக்கான சின்னங்களைச் சூட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

  இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்திய கப்பற்படைப் பிரிவு கமாண்டர் செந்தில்நாதன் பேசியது:

  தற்போது மாணவ மாணவிகளின் திறமை அவர்கள் பாடங்களில் பெறும் மதிப்பெண்களில் காட்டப்படுகிறது. பாட அறிவுடன் பிற துறைகளான விளையாட்டு, இசை, நடனம், நாடகம், ஓவியம், மேடைப் பேச்சு, எழுத்தாற்றல் போன்றவற்றிலும் நாட்டம் செலுத்த வேண்டும்.

  வாழ்வில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக தினமும் மூன்று மணி நேரம் உழைக்க வேண்டும். அத்துறை சார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அதன்படி நடந்தால் கனவு நனவாகும்.

  இன்று மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கப் பல விஷயங்கள் உள்ளன. செல்போன், சினிமா, கணினி ஆகியவற்றை தவறான வழிகளில் பயன்படுத்தக் கூடாது.மாணவ மாணவியர் ஒரே துறையில் வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்காமல், கப்பற்படை, தரைப்படை, விமானப்படை போன்ற முப்படைகளில் வேலைவாய்ப்பு பெற முயல வேண்டும். அது உங்கள் ஆளுமையை மாற்றும். உங்களை சிறந்த மனிதனாக்கும் என்றார்.

  பள்ளியின் முதல்வர் லுவாலியன் சேவியர், துணை முதல்வர் டென்னிஸன், முதுகலை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், விளையாட்டுஆசிரியை கீதா பொன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai