சுடச்சுட

    

    "வலிமையான பாரதம் உருவாக ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம்'

    By பெ.நா.பாளையம்  |   Published on : 16th June 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வலிமையான பாரதம் உருவாக ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசினார்.

    பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த மத்தம்பாளையத்தில் உள்ள ஜி.ஆர்.கோவிந்தராஜூலு கல்வியியல் கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழா பயனீர் கல்லூரியில் உள்ள ஜி.ஆர்.ஜி. கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரி செயலாளரும்,

    ஜிஆர்ஜி பவுண்டேஷன் தலைவருமான டி.சுகுணா தேவராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் லில்லி பிரின்சி ஆண்டறிக்கை வாசித்தார்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசியது:

    ஒரு நாடு சிறப்பான வளர்ச்சியை அடைய தரமான கல்வி அவசியம். கல்விதான் வளர்ச்சிக்கான அடிப்படையாகும். மற்ற நாடுகளிடம் போட்டியிடத்தக்க வகையில் உருவாக வேண்டுமெனில் அறிவார்ந்த சமுதாயம் அவசியம். அந்த சமுதாயத்தை உருவாக்க

    ஒரு தரமான ஆசிரியரால் தான் முடியும். பொருளாதார வளர்ச்சி எப்படி முக்கியமானதோ அதேபோல தான் தரமான கல்வி வளர்ச்சியும் முக்கியம். ஆகவே ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்க பாடுபடவேண்டும் என்றார்.

    தொடர்ந்து அவர், ஆசிரியர் கல்வித் தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி கீதாவுக்கு தங்கப்பதக்கமும், தேர்ச்சி பெற்ற மற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார்.

    விழாவில், ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் காயத்ரி சிவக்குமார், இயக்குநர் கே.ஆர்.கார்த்திகேயன், அமிர்தா பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பேராசிரியர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai