சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன், ரூ. 2.6 லட்சம் திருட்டு

    By கோவை  |   Published on : 16th June 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.6 லட்சம் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது:

    கோவை சரவணம்பட்டி, காளப்பட்டி சாலையில் வசிப்பவர் பழனிச்சாமி (40). இவர் வீட்டிலிருந்தவாறே சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்காக வேலை செய்து வருகிறார். அவரது உறவினர் ஒருவரது திருமணம் அடுத்த வாரத்தில் நடைபெறுகிறது. இதற்காக உறவினர்களுக்கு திருமண அழைப்பு கொடுப்பதற்காக சனிக்கிழமை மாலை வீட்டைப் பூட்டி விட்டு மனைவி, குழந்தைகளுடன் புளியம்பட்டி, அன்னூர் பகுதிகளுக்கு சென்றார். அன்று இரவு அன்னூரில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.6 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து அவர், சரவணம்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai