சுடச்சுட

  

   பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற காரணமாக இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

  கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தலித் குழந்தைகள் ஆவர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

  அதே போல பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களில் எட்டு பேர் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சின்னியம்பாளையம் மாதர் சம்மேளனத்தினர் சார்பில் மாணவர்களின் சாதனைக்கு துணைநின்ற ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

  சின்னியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.தேவராஜன் தலைமையில் திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்களான சுமதி, கலாவதி, உமாமகேஸ்வரி, செல்வி, சில்வியா, பத்மாவதி, மணி, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களான ஸ்ரீராகவி, கெளசல்யா, ஜீவிதா, பாலகணேஷ், ரம்யா, ஆனந்த ராஜ், எம்.கார்த்தி, நந்தகுமார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

  இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை வி.பி. நிர்மலா, மாதர் சம்மேளன தலைவர் கலைவாணி, நுகர்வோர் உரிமை சங்க செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai