சுடச்சுட

  

  இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மனைவி கண்முன்னே கணவர் உயிரிழந்தார்.

  ராவத்தூரைச் சேர்ந்த சுப்பையனின் மகன் ராஜகோபால் (38). தனது மனைவியுடன் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எல் அன்ட் டி பைபாஸ் சாலை சந்திப்பில் மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜகோபாலை மருத்துவமணைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

  தகவலறிந்த சூலூர் காவல் துறை ஆய்வாளர் சக்திவேல்முருகன் உடனே சென்று விசாரித்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த நான்குமுனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடப்பதற்கு, சிக்னலை மதிக்காமல் வாகனங்களை ஓட்டிச்செல்வதுதான் காரணமென்றும், இனி நெரிசல் மிகுந்த அலுவலக நேரங்களில் அடிக்கடி சோதனை செய்து சாலை விதிகளை மீறுவோரை பிடித்து தண்டனை வழங்கப்படுமெனவும் ஆய்வாளர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai