சுடச்சுட

    

    காரமடையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 17th June 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரமடை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது .

    காரமடை பேரூராட்சி சார்பில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் டி.டி.ஆறுமுகசாமி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பேரணியை சட்டப்பேரவை றுப்பினர் ஓ.கே.சின்னராஜ் துவக்கி வைத்தார்.

    இப்பேரணி அரங்கநாதர் கோவில் வீதி, தேர் வீதி, காமராஜர் வீதி உள்பட நகரின் முக்கிய வீதிகளில் சென்று, பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில், நடுநிலைப்பள்ளி மாணவர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai