சுடச்சுட

  

  பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் புகார் மனு

  By கோவை,  |   Published on : 17th June 2014 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி அருகே உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் இதர ஆசிரியர்களுடன் பிரச்னை செய்யும் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் ஆதிதிராவிடர் நல பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 40-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். மாணவ, மாணவிகள் தரப்பில் ஆட்சியரிடம் கொடுத்த மனு விவரம்:

  கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் எங்களது பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் இதர ஆசிரியர்களுக்கும் பிரச்னை உள்ளது.

  மேலும், இதர பாடப் பிரிவு ஆசிரியர்களை பழிவாங்குவதற்காக கம்ப்யூட்டர் பிரிவு மற்றும் வேதியியல் ஆய்வகத்தை தலைமை ஆசிரியர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி வைத்துள்ளார்.

  பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய இருவராலும் பள்ளியில் படிக்கும்

  மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எனவே பிரச்னைக்குரிய தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai