சுடச்சுட

  

  பெ.நா.பாளையத்தில் தனியார் பேருந்து முற்றுகை

  By பெ.நா.பாளையம்,  |   Published on : 17th June 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரியநாயக்கன்பாளையத்தில் தனியார் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

  திங்கள்கிழமை இரவு கோவை, காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு தனியார் பேருந்து சென்றது. பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் என்.பாலமூர்த்தி அதில் ஏறியபோது, பெரியநாயக்கன்பாளையத்தில் பேருந்து நிற்காது, ஏறவேண்டாம் என்று அப்பேருந்தின் நடத்துநர் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

  நீண்ட வாக்குவாதத்திற்குப் பின் பாலமூர்த்தி அதே பேருந்தில் ஏறி பயணித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து, தகவலறிந்த பெ.நா.பாளையம் வட்டார சிபிஎம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சிக் கவுன்சிலர் சிவராஜ் தலைமையில் பெ.நா.பாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அப்பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெ.நா.பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன் சம்பவ இடத்திற்குச் சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அதில், பேருந்தின் நடத்துனர், ஓட்டுநர் இருவரும் பேருந்து அங்கு நின்று செல்லும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai