சுடச்சுட

  

  பொள்ளாச்சி அருகே வெடிபொருள்கள் பதுக்கல்: ஒருவர் கைது

  By பொள்ளாச்சி,  |   Published on : 17th June 2014 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி அருகே, வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர்.

  பொள்ளாச்சியை அடுத்த பக்கோதிபாளையத்தை சேர்ந்தவர் ராசுக்கவுண்டர். இவரது தோட்டத்தில் டெட்டனேட்டர் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி

  வைத்திருப்பதாக கோட்டூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், ராசுக்கவுண்டரின் தோட்டத்தில் போலீஸார் சோதனையிட்டதில், அங்கு நின்றிருந்த வேனில் 1,400 டெட்டனேட்டர்கள், 2,800 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது.

  இதையடுத்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ராசுக்கவுண்டர் தோட்டத்தில் நடைபெற்று வரும் கிணறு தோண்டும் பணியை கோட்டாம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த குப்புசாமியிடம் வெடிபொருள்களை வாங்கியுள்ளார்.

  திங்கள்கிழமை ஒட்டன்சத்திரத்திலிருந்து லாரி மூலமாக ஜெலட்டின் குச்சிகளையும்,

  டெட்டனேட்டர்களையும் பக்கோதிபாளையத்திற்கு ஓட்டுநர் முருகன் (25) கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

  இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி வேனில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி ஓட்டுநர் முருகன் கைது செய்யப்பட்டார்.

  தலைமறைவாக உள்ள கோட்டாம்பட்டியை சேர்ந்த பழனிசாமியையும், வெடிமருந்தை விற்பனை செய்த ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த குப்புசாமியையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai