சுடச்சுட

  

  கோவையில் நடந்து முடிந்த வலுதூக்கும் போட்டிகளிலும், தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டிகளிலும் ஹிந்தி தெரியாததால் தமிழக வீரர்களும் வீராங்கனைகளும் மிகுந்த தவிப்புக்கு உள்ளாகினர்.

  கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டியும், தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியும் அண்மையில் நடைபெற்றன.

  வலுதூக்கும் போட்டியில் சுமார் 300 பேரும், மகளிர் ஹேண்ட்பால் போட்டியில் சுமார் 300 பேரும் ஆக மொத்தம் 600 பேர் பங்கேற்க கோவைக்கு வந்திருந்தனர். தமிழக வீரர்கள், வீராங்கனைகளைத் தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தங்களுக்குள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் தமிழகக்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் பழகவோ, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவோ முடியவில்லை. இதற்கு மொழி தெரியாததே காரணம்.

  தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் பிறருடன் ஹிந்தியில் பேசிக்கொண்டபோது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுமறியாமல் தவித்தனர்.

  வலுதூக்கும் போட்டியில் நடுவர்களுக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வரவில்லை. ஹிந்தியில்தான் பேசினர். இது தமிழக வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் புரியவில்லை. இதனால் ஹிந்தி தெரிந்தவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் புரியவைக்க வேண்டியதாயிற்று.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai