சுடச்சுட

  

  அல் உம்மா தீவிரவாதி ஹைதர் அலிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

  கோவையில் கடந்த 1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் ஹைதர் அலி. பின்னர் இவ்வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

  இந்நிலையில் 1993-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அல் உம்மா தீவிரவாதி பாட்ஷா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

  இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெடிமருந்து பதுக்கி இருந்ததாகவும், கூட்டுச் சதி திட்டம் தீட்டியதாகவும் ஹைதர் அலி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் ஹைதர் அலி தலைமறைவு ஆனார்.

  தலைமறைவாக இருந்த ஹைதர் அலியை 21 ஆண்டுகள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர்.

  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹைதர் அலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

  இதற்கிடையில் ஹைதர் அலி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

  அப்போது ஹைதர் அலியின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். நாள்தோறும் இரண்டு வேளை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஹைதர் அலிக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  ஆனால் மற்றொரு இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஜாமீóன் கிடைக்காத காரணத்தால் ஹைதர் அலி மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai