சுடச்சுட

  

  எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

  Published on : 18th June 2014 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  மாணவ, மாணவிகளுக்காக 38 விடுதிகளும், 15 அரசு உண்டு உறைவிட பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் கல்லூரி மாணவர்களுக்காக 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 5 விடுதிகளும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு 1 விடுதியும், பள்ளி மாணவர்களுக்காக 21 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்காக 8 விடுதிகளும் உள்ளன.

  இதில் பள்ளி விடுதிகளில் 4 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர தகுதி உடையவர்கள் ஆவர்.

  உண்டு உறைவிட பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் சேர தகுதி உடையவர்கள். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவும் தங்கும் வசதியும் இலவசமாக வழங்கப்படுகின்றன. விடுதிகளில் தங்கும் அனைவருக்கும் சீருடைகள், பாய், போர்வை போன்றவை வழங்கப்படும்.

  விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். விடுதிகளில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய விடுதி காப்பாளர்கள் அல்லது காப்பாளினிகளிடம் பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 19 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 14 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai