Enable Javscript for better performance
காரமடை பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    காரமடை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென காரமடை ஒன்றிய பாஜக இளைஞரணித் தலைவர் டி.ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

      காரமடை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும், பொது இடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.  அரங்கநாதர் கோயிலைச் சுற்றியுள்ள 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புக் கடைகள் அதிகளவில் உள்ளன.  மேலும், 4-ஆவது வார்டுக்கு உள்பட்ட ஆர்.கே. நகரில், சாலையை ஆக்கிரமித்து கழிவுநீர்த் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதே போல், காரமடை மயானத்தில் இரவு நேரங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெறவும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆதலால் இதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காரமடையில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பிரிவுகள் மீதும், மயானம், குட்டை போன்ற இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai