Enable Javscript for better performance
\\\"சிமி\\\' இயக்கம் மீது தடை விதிக்கலாமா? குன்னூரில் தகவல் விசாரணை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    "சிமி' இயக்கம் மீது தடை விதிக்கலாமா? குன்னூரில் தகவல் விசாரணை கூட்டம்

    Published on : 18th June 2014 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "சிமி' இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய இயக்கமா என்பது குறித்த தகவல் விசாரணை கூட்டம், குன்னூரில் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    ஸ்டூடன்ட்ஸ் இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் இந்தியா என்ற சிமி இயக்கம், சட்டத்திற்கு மாறாக நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967ன் கீழ் தடை செய்யப்பட வேண்டிய இயக்கமா என்பது குறித்து ஆராய, புதுதில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கைத் தலைமையிலான தீர்ப்பாயம் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் குன்னூரில் உள்ள நகராட்சி கவுன்சில் ஹாலில் காலை 10 மணிமுதல் கூடி தகவல் விசாரணை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பாயம் முன்பு இதுகுறித்து சான்று கூற விரும்பும் பொதுமக்கள், அபிடவிட் மூலம் சமர்ப்பித்தும், விவாதத்தில் நேரில் பங்கேற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai