சுடச்சுட

    

    தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை கண்காணிக்க காவல் துறையில் தனிப்பிரிவு துவங்க வலியுறுத்தல்

    Published on : 18th June 2014 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைக் கண்காணிக்க காவல் துறையில் தனிப்பிரிவு துவங்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஏ.டி.எம். மையத்தின் காவலாளி கொல்லப்பட்டு திருட்டு சம்பவம் நடப்பது தொடர்கதையாகிவிட்டது. அரசை மட்டும் குறைசொல்ல முடியாது. ஏ.டி.எம். மையம் அமைக்கும் வங்கிகள், அதன் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

    இம்மையங்களைப் பாதுகாக்க காவலாளிகளை நியமிப்பதற்காக தனியார் நிறுவனங்களுடன் மிகக் குறைந்த கட்டணத்தில் வங்கிகள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. இதனால் காவலில் இருப்பவர்கள் வேலையில் கவனமுள்ளவர்களாக இருப்பதில்லை. நிறுவனங்கள் கொடுக்கும் ஊதியத்துக்கு முழு நேர ஊழியர்களாக இருக்க முடியவில்லை.

    இரவு நேரத்தில் காவலுக்கு வருபவர்கள் பகலில் எங்காவது வேலை பார்க்கிறார்கள். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை காவல்துறை கண்காணிக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாட்டில் அவர்கள் இயங்க வேண்டும். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் யார் யார் என்ற விவரம் காவல் துறையிடம் இருக்க வேண்டும்.

    இப்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் சேவை தவிர்க்க முடியாதது. ஆனால் லாப நோக்கில் மட்டும் பார்க்காமல் பாதுகாப்பு முக்கியமாகக் கருதப்பட வேண்டும். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைக் கண்காணிக்க காவல் துறையில் தனிப்பிரிவு துவங்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai